எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25/06/2024) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம் மேற்கு பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் […]