May 2024

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும்,  […]

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டி கடந்த 2024.05.05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.தி. திரேஸ்குமார் அவர்கள், வவுனியா மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ச. அரவிந்தன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வீரவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி Read More »

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நேற்று  (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு,, வவுனியா, கிளிநெச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண வர்த்தகச் சந்தை – 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024 Read More »

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்று   (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச்  சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் கௌரவ

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

கண்டல் தாவரங்கள்தொடர்பில் ஆராய்வதற்கு யாழ் மண்டைதீவிற்கு கள விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதிக்கு இன்று (01/05/2024) கள விஜயத்தில் ஈடுபட்டனர். கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை

கண்டல் தாவரங்கள்தொடர்பில் ஆராய்வதற்கு யாழ் மண்டைதீவிற்கு கள விஜயம் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும், திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (30/04/2024) மாலை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின்  தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம்,  எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள்  உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது  கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும், திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கும் இடையில் சந்திப்பு Read More »

சாமானியர்கள்எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

சிறந்த விவசாய பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (30/04/2024) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மிக குறுகிய காலத்திற்குள் சிறந்த விவசாய பயிற்சி ( GOOD AGRICULTURE PRACTICES) திட்டத்திற்குள் 2000 விவசாயிகளை உள்வாங்கியமை மிகச்சிறப்பான செயற்பாடென கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். நவீன விவசாய பொறிமுறை தொடர்பான அறிவை இந்த திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு

சாமானியர்கள்எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »