May 2024

நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை காணும்நோக்கில் காணி உறுதிகளை மேன்மை தங்கிய ஜனாதிபதி வழங்குவதாகவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1286  பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 372   பயனாளிகளுக்கான காணி உறுதிகள், மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/06/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என   பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய […]

நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை காணும்நோக்கில் காணி உறுதிகளை மேன்மை தங்கிய ஜனாதிபதி வழங்குவதாகவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி (CTRB ) மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி  [Clinical Training and Research Block  – CTRB] மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், மாகாண பிரதம செயலாளர், ஏனைய அமைச்சுக்களின்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி (CTRB ) மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் திறந்துவைப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உள்ளக அரங்கில் கடந்த 19.05.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண விளையாட்டுத திணைக்களத்தின் மாகாண ஜூடோ  போட்டி நடைபெற்றது. வடமாகாண விளையாட்டுத் திணைக்கள விளையாட்டு உத்தியோகத்தர்களுடன் அன்று காலை 9.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகி மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது. போட்டியில் பங்குபற்றிய வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்களில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்ககங்கள் மற்றம் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில்

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி Read More »

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நிகழ்வில் வட்டூர் இராமநாதன்  புதல்வர்களின் நாதசங்கமம் எனும் நாதஸ்வர தவில் கச்சேரி  இடம்பெற்றது. “நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்றால் போல மக்களுக்கான சேவைகளும் தேவையாக உள்ளது.

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன Read More »

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு பிரிவினர், பொலிசார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்,

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும்

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு Read More »

குருநகர் கரையோரவீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கௌரவ ஆளுநரும் கலந்துகொண்டார்

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், வட மாகாண  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர். குருநகர் 26 ஆம் வட்டார கரையோர வீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தை யாழ்ப்பாணம் முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு கழிவுகளை வீதியில் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை தரம்பிரித்து சேகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து

குருநகர் கரையோரவீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கௌரவ ஆளுநரும் கலந்துகொண்டார் Read More »

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் இன்று திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (16/05/2024) திறந்து வைத்தார். இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒதுக்கீட்டின் கீழ் 10 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்டது. பெண்களுக்கான

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் இன்று திறந்து வைப்பு Read More »

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல்திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்குஇன்று அடிக்கல் நாட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன்,  மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று (15/05/2024)  அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் மூன்று வீதமான  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பாதிப்புக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல்திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்குஇன்று அடிக்கல் நாட்டல் Read More »

பாலியாறு நீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் இன்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பாதாதை வடக்கு

பாலியாறு நீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் Read More »