May 2024

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று  (30/05/2024) மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய, அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். அனுமதிப்பத்திரம் இன்றி சில […]

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத்

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி Read More »

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து  வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் -யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர்தெரிவிப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் இன்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர்தெரிவிப்பு Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட  செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை Read More »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு திறந்துவைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால்  (26/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான  நெதர்லாந்து நாட்டு தூதுவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் 3329  மில்லியன் ரூபா இலகு கடன்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு திறந்துவைப்பு Read More »

வங்கிகளில் அடமானம்வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை –கௌரவ ஆளுநர் வவுனியாவில் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் நேற்று (26/05/2024) வழங்கி வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், காணிப் பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக கூறினார். காணி பத்திரம் கைமாற்றப்பட்டுள்ளமை, சீதனமாக வழங்கியுள்ளமை, வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை

வங்கிகளில் அடமானம்வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை –கௌரவ ஆளுநர் வவுனியாவில் தெரிவிப்பு Read More »

மாங்குளம்மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் இன்றுதிறந்துவைப்பு

வடக்கு மாகாண சுகாதார துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில்  நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம், மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (26/05/2024) திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ,  பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம், இலங்கைக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

மாங்குளம்மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் இன்றுதிறந்துவைப்பு Read More »

ஆசிரியர் நியமனங்களுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாண கல்வித் துறைக்குள் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் நேற்று (25/05/2024) வழங்கப்பட்டது. மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அவர்களினால் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண

ஆசிரியர் நியமனங்களுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தின்காரணமாகவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபா இலகு கடன் வசதியின் கீழ், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தின்காரணமாகவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்தெரிவிப்பு Read More »