April 2024

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு அரங்கில் 28/04/2024 அன்று  பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மன அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பதையும் கடந்து, சந்தோசம், உடல் ஆரோக்கியம் […]

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

யாழ் மறை மாவட்ட ஆயரின் குருத்துவபொன்விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும் கலந்துக் கொண்டார்

யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் 50 ஆவது குருத்துவ சேவைக்கான பொன்விழா நேற்று (24/04/2024) மாலை நடைபெற்றது. யாழ் ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துச் சிறப்பித்தார். யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற விசேட ஆராதனைகளின் பின்னர் ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் குருத்துவ சேவைக்கான கௌரவமளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

யாழ் மறை மாவட்ட ஆயரின் குருத்துவபொன்விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களும் கலந்துக் கொண்டார் Read More »

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் புதிதாக கட்டப்பட்ட சித்தமத்திய மருந்தகத்தின்  பால்காய்ச்சும் ஆரம்ப நிகழ்வு மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் 10.04.2024 ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி ஆணையாளர் இகணக்காளர்இ திணைக்கள உத்தியோகத்தர்கள், உரியகாணியின் நன்கொடையாளர்,  செல்வச்சந்நிதி ஆலய சமயப்பெரியார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இபிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்புதிய கட்டடமானது பருத்தித்துறை பிரதேச செயலக மக்களிற்கு சுதேச மருத்துவத்துறையூடாக சுகாதார சேவைகளை

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு Read More »

புதிய மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், கௌரவ ஆளுநர் அவர்களை இன்று சந்தித்தார்

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (24/04/2024) சந்தித்து கலந்துரையாடினார். தமது கடமைகளை இன்று பொறுப்பேற்ற புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் செயலகத்திற்கு வருகைதந்து கௌரவ ஆளுநர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்ற கௌரவ ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களையும் கூறினார். அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட

புதிய மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், கௌரவ ஆளுநர் அவர்களை இன்று சந்தித்தார் Read More »

தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டுசாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்லவென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிப்பு

தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டு சாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்லவென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிப்பு. யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் கடந்த மார்ச் மாதம்  18 ஆம் திகதி பிரசுரமாகிய ஆசிரியர் தலையங்கம் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் (23/04/2024) பிரசுரமாகிய வலம்புரி பத்திரிகையின் முதற்பக்கத்திலும், ஊடகங்களின் சுதந்திரத்தை ஆளுநர்

தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டுசாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்லவென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிப்பு Read More »

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு கௌரவ ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களுக்கு கால் நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரிய சட்ட விதிகளை

கால்நடைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவும். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை Read More »

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், கௌரவ ஆளுநர் அவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று (19/04/2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில்

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

சுற்றுலாப் பயணிகளுக்குவீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையைதயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று (18/04/2024) விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகளுக்குவீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையைதயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18/04/2024) நடைபெற்றது. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது Read More »