யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பலாலி ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது குறித்த காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவித்து, அதற்கான ஆவணத்தை யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார். இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும். அதற்கமைய விவசாயிகளுக்கு தேவையான விதை பொருட்களும் கௌரவ ஜனாதிபதியால் […]