கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14 ) என திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இறைமகன் இயேசு குழந்தையாக அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் இயேசு என்றும் எம்மோடு இருக்கிறார் என்பதை கிறிஸ்மஸ் பண்டிகை உணர்த்துகின்றது. […]

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி Read More »