November 2023

கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுவனியாவில் இடம்பெற்றது.

‘ஒரே கிராமம் ஒரே நாடு’ என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல் இன்று (01.11.2023) கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள், வடமாகாண சபை செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். வவுனியா மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தித் […]

கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுவனியாவில் இடம்பெற்றது. Read More »

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும்

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு. Read More »