September 27, 2023

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் 27 செப்ரெம்பர் 2023 ம் திகதி  நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.. யாழ்.மாவட்டத்தின் பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் என்பவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் […]

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

பிரதமர் இல்லத்தில் மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

  2023 ஆம் ஆண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று 26.09.2023 அன்று கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது. கௌரவ மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வருவாய் வசூலிப்பது, சூரிய சக்தியை பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைப்பது, நீதிமன்ற அபராதம் மற்றும் முத்திரை வருவாயை உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளுக்கு பயன்படுத்துவது, மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்

பிரதமர் இல்லத்தில் மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. Read More »

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவர் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளார்

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு.ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் (Jean Francois Pactet) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 27.09.2023 அன்று ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவர் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளார் Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனாதன் அலஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த 25 செப்ரெம்பர் 2023 அன்று கொழும்பில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தங்கள் ஆர்வத்தை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் வடக்கிற்கான அபிவிருத்தியில் தமது ஆதரவைத் தொடர உறுதியளித்தனர்.

வடமாகாண ஆளுநர் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திப்பு Read More »