வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ்.கரவெட்டி கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் 06.09.2023 (புதன்கிழமை) ஆரம்பமானது. இந்த கட்டுமானத்திற்காக 35 மில்லியன் ரூபா தொகை செலவிடப்படவுள்ளது. கரவெட்டி பிரதேசத்தில் கோவிற்சந்தை கிராம மக்கள் தற்காலிக கட்டிடத்தில் இதுவரையில் தமது வியாபார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக கட்டடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், நுகர்வோரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய வணிக இடம் அமைப்பது […]