வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவரும் நிலையில், வடக்கில் பால் தொடர்பான உற்பத்திப்பொருட்களுக்கு பசுப்பாலை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் உட்பட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வடக்கில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கிராமியக்கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், […]