2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம்

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 01.04.2022 ஆம் திகதி A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கௌரவ ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணம், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும்; துறைசார் அலுவலகர்கள் கலந்துகொண்டார்கள்.