October 7, 2019

ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

ஜனநாயகம் வளரவேண்டும் எனில் உண்மையான நீதியும் நியாயமும் இருத்தல் நன்று. நீதியும் நியாயமும் அல்லாத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகத்தை கேட்பது வேரில்லாத மரத்தில் கனிகேட்பது போன்றதாகும். என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமானது . இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆளுநரின் செயலாளர் , அரச அதிகாரிகள் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் […]

ஆளுநர் தலைமையில் வீதிபாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம் Read More »

வடமராட்சி வான்கதவுகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு ஆளுநர் விஜயம்

வடமராட்சி மீனவர்களது 8 வான்கதவுகளின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பருத்தித்துறை பகுதிக்கு 05 ஒக்ரோபர் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அவர்கள் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அப்பகுதி மீனவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். இதன்போது பருத்தித்துறை முனைப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள், வடமராட்சி கடற்றொழில் சமாசத்தின் தலைவர், மீன்படி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அப் பகுதியில் வாழும் மீனவர்களுடன் கலந்துரையாடினார். 16 வான்கதவுகள் சீரமைப்பதற்காக கௌரவ ஆளுநர் அவர்களிடம் வடமராட்சி

வடமராட்சி வான்கதவுகள் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு ஆளுநர் விஜயம் Read More »

வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடக்கு இசை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்க குரல் 2019 இற்கான முதற்கட்ட குரல் தேர்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இந்த குரல் தேடல் நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர்

வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

இறைவன் எனக்கு கொடுத்த சிறிய காலத்தில் உங்கள் சேவகனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனேக செயற்திட்டங்களை மேற்கொண்டும் இளைஞர்களுக்காக எதுவும் செய்யவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இளைஞர்களுக்கான ஆரம்ப படியாக இந்த விளையாட்டு முயற்சி அமைந்துள்ளது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று ஆரம்பமானபோதே

மாபெரும் ஆளுநர் வெற்றிக்கிண்ண நிகழ்வு ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

வவுனியா கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநரினால் திறப்பு

வவுனியா மாவட்டம் புகையிரத நிலைய வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநர் அவர்களினால் 06 ஒக்ரோபர் 2019 அன்று திறந்தவைக்கப்பட்டது.

வவுனியா கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன அலுவலகம் ஆளுநரினால் திறப்பு Read More »

விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர்

போர் கண்ட தேசத்தில் திரும்பவும் தேர் ஓடவேண்டும் என்றால் அந்த போருக்கும் தேருக்கும் இடையிலே இருக்கின்ற ஏரோடவேண்டும். வான் மழையை அறுவடைசெய்து அங்கே குளம் கட்டி குலதெய்வம் வைக்கும் நாகரீகம் வளர்த்தவர்கள் நம் தமிழர்கள் . அந்த நாகரீகம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும அப்பாற்பட்டதென்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்று என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஓமந்தை ஆழப்படுத்திய அலைகல்லுப்போட்ட குளத்தினை கையளிக்கும்

விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர் Read More »