September 2019

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர்

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமென்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழலினை வடமாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் எண்ணக்கருவிற்கு அமைய இலஞ்ச ஊழல் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பவை தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் செயலமர்வு 13 செப்ரெம்பர் 2019 […]

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர் Read More »

படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 12 செப்ரெம்பர் 2019 அன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஆளுநர் அவர்களின் இந்த கலந்துரையாடல் இன்று முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது படைத்தரப்பு , பொலிஸார் , திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் ஒவ்வொருவர்

படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் – ஆளுநர்

நாங்கள் போர்கண்ட தேசம். நீங்கள் போருக்கு பின்னால் பிறந்த பிள்ளைகள். வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் என்று நான் நம்புகின்றேன். வரலாறு எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இனிவருகின்ற எதிர்காலத்தை நாம் நன்மையாக அமைக்கவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி 12 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் – ஆளுநர் Read More »

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 12 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2018 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 5.85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் பொறியியற் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் ,

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

 மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம்   

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் வடமாகாணசபைக்கு நியமிக்கப்பட்ட  மொழிபெயர்ப்பாளர்கள்   4 பேருக்கான நியமனங்கள் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் வழங்கப்பட்டது .

 மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம்    Read More »

‘வடக்கின் தங்கக்குரல்’ – விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு

விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 30,2019 இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வட மாகாண இளைஞர் யுவதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கின் தங்கக்குரல் நிகழ்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்கக்குரல் 2019 இற்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண இளைஞர் யுவதிகளை இசைத்துறையில் ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில்

‘வடக்கின் தங்கக்குரல்’ – விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்- ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07 செப்ரெம்பர் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. யாழ்பாண பல்கலைக்கழகத்தில் வேந்தர் மற்றும் துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் பட்டமளிப்பு விழா நடத்தமுடியாமல் இருப்பதாகவும் இதனால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடுவதற்கும் உயர்படிப்புக்களை மேற்கொள்வதற்கும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதனால் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தி சிறந்ததொரு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்- ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண விளையாட்டு விழா 2019 – வெற்றியாளர்கள் ஆளுநரால் கௌரவிப்பு

வடமாகாண விளையாட்டு விழா 2019 இறுதிநாளின் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (08) மாலை கலந்து சிறப்பித்ததுடன் வெற்றிபெற்ற கழகங்களின் வீர வீராங்கனைகளுக்கான பதக்கங்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

வடமாகாண விளையாட்டு விழா 2019 – வெற்றியாளர்கள் ஆளுநரால் கௌரவிப்பு Read More »

என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்

யாழில் இடம்பெற்றுவரும் என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கு 08 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் விஜயம் செய்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு வருகைதந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் வருகை தந்த சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தின் உணவு உற்பத்தி பிரிவினால் வழங்கப்படும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தார். இதேவேளை ஜனாதிபதி அவர்களின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் பாரத தென்னக்கோன் ஆளுநர் அவர்களுக்கும் மா மரக்கன்று ஒன்றினைய வழங்கினார்.    

என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம் Read More »

முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (07) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக இரண்டு வருடங்கள் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று செல்லவுள்ள நிலையிலேயே மரியாதை நிமித்தமும் தனது ஓய்வினை அறிவிக்கும் பொருட்டும் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் ஆளுநர் அவர்களை சந்தித்தார். இறுதிப்போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின்

முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு Read More »