விவசாயக் கண்காட்சி – 2019
விவசாயக் கண்காட்சி – 2019 Read More »
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இதன்போது பல
யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்மாவட்டத்தில் துடுப்பாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் , யாழில் ஓர் கிரிக்கட் அக்கடமியை ஸ்தாபிப்பதுடன் கிரிக்கட் விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , ஆளுநர் அவர்களிடம் இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மேலும் வடமாகாணத்தின் விளையாட்டுத்திணைக்களத்தின் கீழ் கடினப்பந்தை இணைத்துக்கொண்டு வட மாகாண சபையின் ஊடாக
யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு Read More »
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது காணொளி தொடர்பாடல் மூலம் ஆளுநர் அவர்கள் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்துடன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக
வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல் Read More »
வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பிலான அறிக்கை வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது.