August 2019

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 02 ஆகஸ்ட் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல் Read More »

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழிலிருந்து நாளை காலை 06.25 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம் காலை

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள் Read More »