July 2019

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஆளுநர் விஜயம்

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு 10 யூலை 2019 அன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் மாணவர்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.   -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்திலிருந்து இம்முறை தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ரூபா ஒரு மில்லியன் (ரூபா. 1,000,000) நிதியினை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 08 யூலை 2019 அன்று இடம்பெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விழுந்துபோகாமல் வாழ்வது மட்டுமல்ல விளையாட்டில் எப்போதெல்லாம் நாம் வீழ்கின்றோமோ அப்போதெல்லாம் மீண்டும் எழக்கூடிய மனவலுவும் உடல்பலமும்

தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – வடமாகாண ஆளுநர் Read More »

வடமாகாண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படவேண்டுமென்று கேட்டுக்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், அதை நோக்காக கொண்டுமுன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடமாகாண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (08)முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து தனது ஓய்வு குறித்து தெரிவித்துக்கொண்டார். போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை பாராட்டிய கௌரவ ஆளுநர்

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு Read More »

ஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட் அவர்கள் வடமாகாண  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (04) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். 29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை பார்வையிட காங்கேசன்துறை ,கீரிமலை மக்கள் இன்று விஜயம் செய்ததனை நினைவுகூர்ந்த ஆளுநர் அவர்கள், ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொதுமக்களுடைய காணிகளை அவர்களிடமே விடுவிக்கும் செயற்பாடுகளை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி

ஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது. இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இன்றும் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம் Read More »

வடமாகாண விவசாய திணைக்கள பிரச்சினை – விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர்

கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு கூட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்திருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ ஆளுநர் தீர்மானித்துள்ளார். குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் சிறுபான்மை இன பெண் அதிகாரியொருவர் தாக்கப்பட்டதனை வன்மையாக கண்டிக்கும் ஆளுநர் அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் இனி

வடமாகாண விவசாய திணைக்கள பிரச்சினை – விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர் Read More »

“வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடல்

வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய “வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடலின் (“Northern Province Round Table”) முதலாவது கலந்துரையாடல் நாளை (04) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளைய இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் “வடமாகாணத்தின்

“வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடல் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் 03 யூலை 2019 அன்று புதன்கிழமை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019 Read More »

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு

வடமாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் அவர்கள் இன்று (01) தனது கடமைகளை வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு Read More »