July 2019

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு 

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (16) முற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு  Read More »

ஆளுநர் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (15) முற்பகல் ஆளுநருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநர் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் ஆளுநர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »

‘வடமராட்சி களப்பு’ செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன்- கௌரவ ஆளுநர் விஜயம்

யாழ் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களும், கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் 14 யூலை 2019 அன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டதுடன் செயற்திட்டம் குறித்தும் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் ஆராய்ந்தனர். பொறியியலாளர் திரு குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியப்பட்டு பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்த்தன அவர்களினால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டு இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் ‘வடமராட்சி களப்பு’

‘வடமராட்சி களப்பு’ செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன்- கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (11) மாலை கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. சிறுபோகத்தின் அறுவடை நெருங்கிவரும் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டு ஆளுநர் அவர்கள் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது இரணைமடு குளத்தின் நீரை சரியான முறையில் விவசாயிகளால் முகாமைத்துவம் செய்ய முடிந்தமையால் வழமையாக மேற்கொள்ளும் ஏக்கர் அளவைவிட

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 12 யூலை 2019 அன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற  ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர்

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு Read More »

புதிய செயலாளர்கள் நியமனம்

வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள் , கூட்டுறவு , உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக  ஆர் .வரதீஸ்வரன் கௌரவ ஆளுநர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற  இந்த நிகழ்வில்  நியமனக்கடிதங்கள் கௌரவ ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டதுடன் இந்த

புதிய செயலாளர்கள் நியமனம் Read More »

யாழில் ஆளுநர் தலைமையில் SMART SRI LANKA திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் முகமாக ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SMART SRI LANKA திட்டத்தின் யாழ் மாவட்ட பயிற்சி நிலையத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (11) காலை இடம்பெற்றது. 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த இரு மாடி கட்டடத்தொகுதி எதிர்காலத்தில் யாழ்மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகள் சரியான

யாழில் ஆளுநர் தலைமையில் SMART SRI LANKA திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் 10 யூலை 2019 அன்று நடைபெற்றது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தங்கப்பதக்கம்

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களால் கடந்த 5ஆம் திகதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நானாட்டான் பிரதேச சபை வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டது. இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை ஊக்குவிக்கும் விதமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 10 யூலை 2019 அன்று கைதடி

வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தங்கப்பதக்கம் Read More »

பின் தங்கிய பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான தேவைகள் தொடர்பான களவிஜயம் – பிரதேச வைத்தியசாலை, நெடுந்தீவு

பின் தங்கிய பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கான மருத்துவ சேவையினையும் வைத்தியசாலையின் தேவைகளையும் கண்டறிந்து கொள்ளும் நோக்குடன், வடமாகாண சுகாதார அமைச்சும், மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையும் இணைந்து பின் தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அவற்றின் தேவைகள் பற்றிய கலந்துரையாடலொன்று 09 யூலை 2019 நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர்,

பின் தங்கிய பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான தேவைகள் தொடர்பான களவிஜயம் – பிரதேச வைத்தியசாலை, நெடுந்தீவு Read More »