March 8, 2019

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம்

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முந்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவரூடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முந்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியாமையின் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை கௌரவ ஆளுநர் அவர்கள் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்திருந்தார். ஆனாலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு […]

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம் Read More »

வடமாகண சபையின் இலச்சினை

உட்பொருள் இலச்சினையின் மேற்பகுதியிலுள்ள மகுடவாக்கியம்  சமத்துவத்தை குறிக்கின்றது. பனைமரமானது பாரம்பரிய ஜீவனோபாய வளத்தைக் குறிப்பதுடன் இந்த மரமானது காலங்கலமாக வட மாகாண சமூகத்திற்கு உணவு, புகலிடம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வழிவகைகளை வழங்கியுள்ளது. அன்ன வடிவிலுள்ள யாழ் ஆனது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. யாழ் என்கின்ற இசைக்கருவி, அன்னம் மற்றும் ஐந்து வளையங்கள்.யாழ் இசைக்கருவியானது மேன்மைமிக்க புராதன கலாசாரத்தினை பிரதிபலிகின்றது. இதிலிருந்தே ”யாழ்ப்பாணம்” என்ற சொல்லும் உருவானது. அன்னமானது மக்களினுடைய இயல்பான பண்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதாவது

வடமாகண சபையின் இலச்சினை Read More »

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையானது (Total Knee replacement surgery) 28 ஜனவரி 2019 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையமற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இவ் அறுவை சிகிசையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வளப் பற்றாக்குறைகள் உள்ள போதும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக இச்சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை Read More »

இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக் குளமானது வவுனியாவின் சேமமடுக் குளத்திலிருந்து உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஊடாக 60 கிலேமீற்றர் தூரம் பயணிக்கும் கனகராஜன் ஆற்றின் மூலமாக நீரினை பெற்றுக்கொள்கின்றது. அதன் மொத்த நீரேந்துப் பிரதேசமானது 588 சதுர கிலோமீற்றர்களாகும். முதன்முதலாக இரணைமடு நீர்த்தேக்கமானது நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் 49 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவாக அமையுமாறு 1902 ஆம் ஆண்டு நீர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு நிறைவுறுத்தப்பட்டன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூன்று குள விரிவாக்கால் பணிகளினூடாக 1975

இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை Read More »

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம்

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் சோளம் மற்றும் கௌபி பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் சோளப் பயிர்செய்கையில் ஏற்பட்ட படைப் புழுக்களின் தாக்கம் தற்போது ஏனைய பயிர்கள் மீதும் தாக்கியுள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் படைப்புழுக்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை நோக்கமிடத்து, அதிகூடிய பாதிப்பாக வவுனியா மாவட்டத்தில் சோளப்

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம் Read More »