February 21, 2019

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் நீர் வளங்களை முகாமைத்துவம் செய்து வட மாகாணத்தில் காணப்படும் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பொதுவானதும் உறுதியானது நிரந்தரத் தீர்வொன்றினை காணுவதனை நோக்காகக் கொண்டு ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமையப் பெற்றுள்ள மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு வட மாகாண ஆளுநரின்  தலைமையில் 07 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. […]

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனடிப்படையில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் கௌரவ ஆளுநர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.  

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின்      சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம் Read More »