வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி வடக்கு மாகாண சபையின் வீதி பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘வீதி போக்குவரத்து நடைமுறைகளை கடைப்பிடித்து பெறுமதி மிக்க உயிர்களைக் காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இன்று 09/05/2024ம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக காங்கேசந்துறை வீதி சத்திரசந்தி வரை கவனயீர்ப்பு நடைபவனி இடம்பெற்றது.
இந்நடைபவனியில் வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபையின் ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், யாழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வணிக சங்கப் பிரதிநிதிகள், போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பதவி செய்யப்பட்ட சாரதி பயிற்சிப் பாடசாலை பொறுப்பாளர்கள், மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது கனரக வாகன தகுதி பரிசோதனை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத நடைபாதை வியாபார நடவடிக்கை மற்றும் பாரவூர்திகளுக்கு சிவப்பு நிற அடையாளமிடல் செயற்பாடு ஆகியனவும் இடம்பெற்றன.