வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (16.07.2025) நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விவசாயிகளை எதிர்காலத்தில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பயிர்ச்செய்கையை நோக்கி நகர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் இம்முறை சிறுபோக செய்கையின் பெறுபேறுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் பின்னர், விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீச்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றம், இடர்பாடுகள் தொடர்பில் ஆளுநரால் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.