வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நெற்ச்செய்கையில் வயல் விழா நிகழ்வானது கடந்த 02.01.2026 அன்று காலை 11:30 மணியளவில் பண்ணை முகாமையாளர் திரு.ம.அஜந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ். செந்தில்குமரன், மேலதிக விவசாயப் பணிப்பாளர் திரு தெ.யோகேஸ்வரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜுடித் மாலினி முரளீதரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு எஸ். சர்வானந்தா, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நெற் செய்கையில் வௌ;வேறு பயிர் ஸ்தாபிப்பு முறைகள், பாரம்பரிய நெல் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு மற்றும் நெற்;செய்கையில் கோனோ களையகற்றும் கருவியின் பயன்பாடு தொடர்பான விளக்கங்கள் பண்ணை முகாமையாளர் திரு.ம.அஜந்தகுமார் அவர்களினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.






