ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி’ என்ற எண்ணக்கருவிற்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின்’ கீழ் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேரடியாக இன்று (05) பார்வையிட்டார்.
இதனடிப்படையில் வவுனியாவில் அமைந்துள்ள மதகுவைத்தகுளம், சின்னத்தம்பனைக் குளம், கலேசியம்பலாவைக் குளம் மற்றும் துட்டுவாகைக்குளம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் அப்பிரதேச விவசாயிகளுடனும் சுமூக கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் இத்திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட வவுனியா மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கொண்டனர்.