வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் 45 இலட்சம் நிதியுதவியில் வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று காலை (19) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்களினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு