சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அவர்களின் உள்ளுர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை நிகழ்வானது கௌரவ ஆளுநர் செயலக வளாகத்தில் 17.11.2022 அன்று நடைபெற்றது.
இச்சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் 40 விற்பனை காட்சி கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கௌரவ ஆளுநர் – வட மாகாணம் மற்றும் செயலாளர் – மகளீர் விவகார அமைச்சு, வட மாகாணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ ஆளுநர் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை மேலும் விருத்தி செய்யும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் ஈடுபட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் மொத்த விற்பனை புரள்வானது 442,318.00 ரூபாவாகக் காணப்பட்டது சிறப்பம்சம் ஆகும்.