வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியன கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துடன் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா 17.01.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்-இந்திய துணைத்தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமான். ராம் மகேஷ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வெங்கலச்செட்டிகுளம், பிரதேச செயலாளர் திரு. B.C.R.பபா பஜோன், வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திரு.P.M.A.K.குமார மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். இவர்களுடன் வட மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.எஸ்.சுரேந்திரன் அவர்களும்இ திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் ஆலயவழிபாட்டைத் தொடர்ந்து புதிரெடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு பொங்கல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோவில்குளம், கரன் குழுவினரால் மங்கல இசை இசைக்கப்பட்டது.
கலாநிதி நா.செந்தூர்செல்வன் அவர்களின் நெறியாள்கையில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் மேடையை அலங்கரித்தது. கிடாச்சூரி கண்ணகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் செயலாளர் திரு.அரியரட்ணம் அமலேஸ்வரன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து திரு.சுகிர்தகுமாரன் லுமிந்தன் மற்றும் திரு.ஜெயசிங்கம் ஷதுசன் ஆகியோரின் பக்தி இசை நிகழ்வினை அலங்கரித்தது.
பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளரினால் தலைமையுரை ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமதி.மோ.சுதர்சினி அவர்களின் நெறியாள்கையில் வ/கூமாங்குளம் சித்திவிநாயகர் பாடசாலை மாணவர்களின் செம்பு நடனமும்இ திரு.சுகிர்தகுமாரன் லுமிந்தன் அவர்களின் நெறியாள்கையில் வஃதமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் கிராமிய இசையூம்இ திருமதி.ச.ஜெயசீலா அவர்களின் நெறியாள்கையில் வ/புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்களின் கிராமிய நடனமும் அடுத்தடுத்து நிகழ்வினை அலங்கரித்தன. யாழ்-இந்திய துணைத்தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீமான்.ராம் மகேஷ் அவர்களால் சிறப்பு விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து செல்வி.பிரதீபன் ஹரிணி அவர்களின் குறத்தி நடனமும்இ திருமதி. மனோரஞ்சினி கனகரட்ணம் அவர்களின் வாத்திய கலாலயம் குழுவினரின் பல்லியம் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. நெடுங்கேணி கலைஞர் குழுவினரால் அருவி வெட்டுப்பாடல் இசைக்கப்பட்டது. திருமதி.பா.வைஸ்ரபி அவர்களின் நெறியாள்கையில் வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்களினால் கோலாட்டம் நடனநிகழ்வு ஆற்றப்பட்டது. தொடர்ந்து வட மாகாண கல்விஇ பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையினை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக வவுனியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.கவிராஜ் அபிராமி அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. தொடர்ந்து ஆலயவளாகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் வடமாகாண தைப்பொங்கல் விழாவானது பிற்பகல் 2.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.