வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய
முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இந்த புத்தகத்திருவிழாவில் அதிகளவு வாசகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு