வடமாகண சபையின் இலச்சினை

உட்பொருள்

  • இலச்சினையின் மேற்பகுதியிலுள்ள மகுடவாக்கியம்  சமத்துவத்தை குறிக்கின்றது.
  • பனைமரமானது பாரம்பரிய ஜீவனோபாய வளத்தைக் குறிப்பதுடன் இந்த மரமானது காலங்கலமாக வட மாகாண சமூகத்திற்கு உணவு, புகலிடம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வழிவகைகளை வழங்கியுள்ளது.
  • அன்ன வடிவிலுள்ள யாழ் ஆனது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. யாழ் என்கின்ற இசைக்கருவி, அன்னம் மற்றும் ஐந்து வளையங்கள்.யாழ் இசைக்கருவியானது மேன்மைமிக்க புராதன கலாசாரத்தினை பிரதிபலிகின்றது. இதிலிருந்தே ”யாழ்ப்பாணம்” என்ற சொல்லும் உருவானது. அன்னமானது மக்களினுடைய இயல்பான பண்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதாவது உண்மை எதுவென்றும் போலி எதுவென்றும் பிரித்துப்பார்க்கின்ற திறனையும் சமாதானத்தையும் அழகினையும் குறிப்பதாகும். இவையே வடமாகாண சமூகத்தின் மூன்று அத்தியாவசிய பண்புகளாகும். ஐந்து வளையங்களும் ஐந்து மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
  • இலச்சினையில் காணப்படும் திறந்த புத்தகமானது  ஒவ்வொரு விடயத்திலும் பூரணத்துவமான நிலைமையுடைய கல்வியறிவைக் குறிக்கின்றது.
  • நெற்கதிர்கள் விவசாயத்தைச் சுட்டிக்காட்டுவதுடன் சக்கர பற்கள் கைத்தொழிலைச் சுட்டிக்காட்டுகின்றது.