வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க சந்தித்தார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  18/11/2024 அன்று ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.