வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையிலான சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (14.07.2025) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சாவகச்சேரி நகர சபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் கோரிக்கை மனுவொன்றை தவிசாளர் ஆளுநரிடம் கையளித்தார். முடியுமானவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.