வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மனுக் கையளித்ததுடன், சபையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். இயலுமான வரையில் சபைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.