வவுனியா மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பயணத்தின் ஓர் அங்கமாக வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார்.
இதன்போது சபையின் தவிசாளர் எஸ்.சி.வீரக்கோன், ஆளுநர் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ஆகியோரை வரவேற்றார்.
வவுனியா பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை ஆளுநர் பார்வையிட்டார். நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்டு பயன்படுத்தபடாதுள்ள கலாசார மண்டபத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது ஆராய்ந்தார்.
மேலும், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சிலர் ஆளுநரைச் சந்தித்து தமக்கான வேலை வாய்ப்புக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.