மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரிடமும் எங்களை விஞ்சிய ஏதாவது திறமை இருக்கின்றது. அது பாராட்டப்படவேண்டியதுடன் இன்னமும் ஊக்குவிக்கப்படவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட அன்பாகப் பழகக் கூடியவர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று புதன்கிழமை (04.12.2024) ஊரெழு என்.கே. மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,
இன்றைய இளையோர் கஷடப்பட்டு வேலை செய்வதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இலகுவாக உழைக்கலாம் என கனவு காண்கின்றார்கள். ஆனால் எமது மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அதற்கு எதிர்மாறானவர்கள். கஷ;டப்பட்டு தமது சொந்தக் காலில் நிற்பதற்காக பாடுபடுகின்றார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் எல்லோரும் பணியாற்றுவோம். மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு மின்சார வசதி தேவையாக இருக்கின்ற என்று கோரினார்கள். அதைப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் அரச திணைக்களங்களை அணுகும் வசதி சகல இடங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.