யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நாள்

 

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 21.08.2025 அன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு அமைவான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் சனிக்கிழமை 30.08.2025 அன்று நடைபெறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.