யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் பாராட்டு விழா வலம்புரி ஹோட்டலில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை (19.11.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கட்டளைத்தளபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நினைவுச் சின்னத்தையும் கையளித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த காலங்களில் பணியாற்றிய பலர் அதன் பின்னர் இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோன்று கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவும் இராணுவத் தளபதியாக வந்து வடக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்காக வீடுகளை அமைப்பதற்கும், மாணவர்களின் கல்விக்கான உதவிகளை வழங்குவதிலும் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அரும்பணியாற்றியமையையும் கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் நினைவுகூர்ந்தார்.