யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பி எம் எஸ் சார்ள்ஸ் 16 ஜ னவரி 2020 அன்று பார்வையிட்டார்.
இதன்போது யாழ் மாநகர முதல்வர், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய துணைத் தூதுவர், யாழ் மாநகரசபை ஆணையாளர், ஆளுநரின் செயலாளர் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டரர்கள்.
கட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியியலாளர்களும் கட்டிட அமைப்புகளின் தன்மைகள் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது குறித்த கட்டடத்தொகுதி விரைவாக மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப்பெற வேண்டுமெனவும், கட்டடத்தில் உள்ள வசதிகள், வாய்ப்புகள் தொடர்பில் அனைவருக்கும் தெரியப்படுத்துவதோடு பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பான வினைத்திறனான நீண்டகால நிர்வாக பொறிமுறை தொடர்பில் மாநகர சபை விரைவாக திட்டமிட வேண்டுமெனவும் அதற்க்கான முன்மொழிவுகளை தனக்கு விரைவாக அனுப்பிவைக்குமாறும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்
நவீன வசதிகளைக்கொண்ட குறித்த கலாசார கட்டடத்தொகுதியை கலைகளின் மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் வினைத்திறனுடன் பயன்படுத்துவது தொடர்பாக அங்கிருந்தவர்களுக்கு ஆலோசனைகளை ஆளுநர் வழங்கினார்.