யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18 ஒக்டோபர் 2025 அன்று அமைச்சு அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 53 பயனாளிகளுக்கும் தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடு வளர்ப்பிற்கான உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுகளில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.