யாழில் ஆளுநர் தலைமையில் SMART SRI LANKA திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் முகமாக ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SMART SRI LANKA திட்டத்தின் யாழ் மாவட்ட பயிற்சி நிலையத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (11) காலை இடம்பெற்றது.

25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த இரு மாடி கட்டடத்தொகுதி எதிர்காலத்தில் யாழ்மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகள் சரியான தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான ஒரு தளமாகவும் , வழிகாட்டுவதற்கான ஒரு மத்திய நிலையமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதிலும் இதுவரை 6 மாவட்டங்களில் SMART SRI LANKA  செயற்திட்டத்தின் பயிற்சி நிலையங்கள் ஜனாதிபதி அவர்களினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.    இந்த SMART SRI LANKA செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தன அவர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு