முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி

அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி ஒன்று முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகினால் 2020.09.14 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பிரதம விருந்தினராக திருமதி. அ.ஸ்ரானலி டிமெல், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி, வடமாகாணம் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்துவைத்தார். 10 நாட்களைக் கொண்ட இப் பயிற்சி நெறியானது முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பணிப்பாளர் திரு.வே.ஆயகுலன் தலைமையில் திரு.சு.செந்தூரன், பயிற்சி உத்தியோகத்தர் அவர்களது வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை சின்மய மிசன் சுவாமிகள் மனஒருமைப்பாடு மற்றும் ஊக்கப்படுத்தல் தொடர்பான விசேட உரையினை நிகழ்த்தினார்.