மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான Cross Country Race போட்டி கடந்த 2024.02.17 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வில் வவுனியா மாவட்ட மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உதவி பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ சரத்சந்திர அவர்கள் வீராவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி 8.00 மணியளவில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ் மாவட்டம் அணி சம்பியனாகவும்,கிளிநொச்சி மாவட்ட அணி 2 ம் இடத்தையும் பெண்கள் அணி சார்பில் கிளிநொச்சி மாவட்ட அணி சம்பியனாகவும் 2ம் இடத்தை வவுனியா மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாமிடம்
ஆண் – ஜே.மிதுர்சன்
பெண் – எம். கபிலா
இரண்டாமிடம்
ஆண் – எஸ்.கீரன்
பெண் – தினோஜி
மூன்றாமிடம்
ஆண் -எஸ்.டனுசன்
பெண் – டனுசியா
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் முதல் 10 பேரும் பெண் போட்டியாளர்களில் முதல் 06 போட்டியாளர்களும் எதிர்வரும் 15.03.2024 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா Cross Country Race போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.