மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
மாகாண மட்டத்தில் ஆண்கள்; அணி சார்பில் வவுனியா மாவட்ட அணி 05 தங்கம்,01 வெள்ளி மற்றும் 04 வெண்கலமப் பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி 04 தங்கம், 08 வெள்ளி மற்றும் 07 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தையும் முல்லைத்;தீவு மாவட்ட அணியினர் 04 தங்கம், 02 வெள்ளி மற்றும் 02 வெண்கலமப் பதக்கங்கள்பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மாகாண மட்டத்தில் பெண்கள் அணி சார்பில் முல்லைத்தீவு மாவட்ட அணி 05 தங்கம், 01 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 1ம் இடத்;தையும் வவுனியா மாவட்ட அணி 02 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணி 01 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சிறந்த குத்துச் சண்டை வீரராக வவுனியா மாவட்டத்தின் ஜி.கிரிதரன் அவர்களும் பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனையாக எம்.இந்துகாதேவி அவர்களும் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற போட்டியாளர்களும் எதிர்வரும் 04.07.2024 ஆம் திகதி தொடக்கம் 07.07.2024 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.