மாகாண புடவைக் கைத்தொழில் போட்டி 2021

உள்ளூர் நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புடவைக் கைத்தொழில் திணைக்களத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மேற்படி போட்டியானது சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இவ்வாண்டு நவம்பர் மாதம் 06ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணப்பணிப்பாளர், புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், போட்டிக்கான நடுவர்குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் போட்டி நடைபெற்றது.

வடமாகாண ரீதியாக மொத்தமாக 216 கைத்தறி நெசவு ஆக்கங்கள் போட்டிக்கு நெசவாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இப் போட்டியில் 12 முதலாம் இடங்களும், 08 இரண்டாம் இடங்களும், 08 மூன்றாம் இடங்களும் மற்றும் 20 திறமைப் பரிசுகளும் கிடைக்கப் பெற்றன. மேலும் மாகாண மட்ட போட்டியில் தெரிவாகிய ஆக்கங்கள் மொத்தம் 48 புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட விருக்கின்றன.