வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகங்கள் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 02.01.2026 மீண்டும் திறக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் திரு பி.ஏ.சரத்சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு எஸ். சிவஸ்ரீ, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. எஸ். செந்தில்குமரன், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. தெ. யோகேஸ்வரன், பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி. ஜுடித் மாலினி முரளிதரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. எஸ் சர்வானந்தா, வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






