மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்
தூரநோக்கு
நிலைபேறான அபிவிருத்தியும் தன்னிறைவான உணவு உற்பத்தியும் சமூக பொருளாதார அபிவிருத்தியுடனான மேம்பாடும்.
பணிக்கூற்று
அரசின் காணிக் கொள்கை மற்றும் நியமங்களுக்கு அமைவாக சீரான முறையில் அரச காணியினை பகிர்ந்தளித்து, அதனூடாக வட மாகாணத்தில் நிலையான அபிவிருத்தியினையும் சுற்றுச்சூழலையும் பேணுதல்.
நோக்கங்கள்
01. பகிர்ந்தளிக்ககூடிய காணிகள் தொடர்பான தகவல்களை பெற்று காணியற்ற மக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சட்டவிதிமுறைகளுக்கேற்ப அரச காணிகளை பகிர்ந்தளித்தல்.
02. அரசகாணியில் 1995.06.15ற்கு முன்னர் அத்துமீறி பிடித்து குடியிருந்து அபிவிருத்தி செய்து வருபவர்களுக்கு காணிக்கச்சேரி மூலம் சீரமைத்தல்.
03. பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளில் வினைத்திறனான உற்பத்தியை மேம்பாட்டை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்தல்.
04. பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களுக்காக குத்தகையில் அரச காணிகளை வழங்கி குத்தகை அறவீட்டின் மூலம் வட மாகாணசபையின் வருமானத்தினை அதிகரித்தல்.
05. அரசகாணி தகவல் முகாமைத்துவ தரவுத்தளம் (ந – ளடiஅ) ஊடாக பங்கீட்டாளர்களுக்கு காணிக்கான உரித்தினை (புசயவெ) வழங்குதலை விரைவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் இம்முறை மூலம் முகாமை செய்ய நடவடிக்கை எடுத்தல்
06. கடந்தகாலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது அரச காணிகளுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களை இழந்த மக்களுக்கு மீளவும் ஆவணங்களை வழங்கி அவர்களது காணி உரிமையினை உறுதிப்படுத்தல்.
07. காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்திற்கு அமைய குடும்ப அங்கத்தவர்களிடையே காணி உரிமை மாற்றத்தினை உறுதிப்படுத்தலும் நடைமுறைப்படுத்தலும்.
08. அனுமதிக்கப்பட்ட உப பிரிவிடல் அலகிற்கு குறைவாக, காணிகள் பிரிவிடல் செய்வதனை தடுப்பதனூடாக உற்பத்தியினை மேம்படுத்தல்.
09. அரசகாணிகளை அரசின் தேவைகள், அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குமாக பாதுகாத்தல்.
10. வினைத்திறனான சேவையினை வழங்குவதற்காக உத்தியோகத்தர்களது ஆளுமைகளை பயிற்சி மூலம் விருத்தி செய்தல்.
அரச காணியில் காணப்படும் பிணக்குகளைத் தவிர்ப்போம்
தொடா்புகளுக்கு
பதவி | பெயா் | நேரடி இல. | கை.தொ.இல | மின்னஞ்சல் |
காணி ஆணையாளா் | அ.சோதிநாதன் | 021-3215539 | 0773618499 | landdeptnp@gmail.com |
கணக்காளா் | திரு.சி.பரதன் | 021-2211077 | 0771882858 | landdeptnp@gmail.com |
நிா்வாக உத்தியோகத்தா் | திரு.பா. வித்தியானந் | 021-2220836 | 0778886168 | landdeptnp@gmail.com |