மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு15 யூலை 2021 அன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் களஞ்சியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் இத் திட்டமானது கிராமப்புற விவசாயிகளின் தானியம் மற்றும் உப உணவுகளை களஞ்சியப்படுத்தி சரியான நேரத்தில் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்ததோடு இத்திட்டத்திற்கான நிதி உதவிகளை வழங்கிய மேன்மை தங்கிய ஜனாதிபதி, விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் மற்றும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவிய விவசாயத்துறைசார் அதிகாரிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் விவசாயத்துறைசார் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.