மகளிர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடந்த 2025ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் அடைவுகள் மற்றும் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், நடப்பு 2026ஆம் ஆண்டுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்றிட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.