மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி

மெழுகுதிரி உற்பத்தியில் 04 பேர் கொண்ட குழுவாக ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 2018ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியூட்டத்தினூடாக உற்பத்தியினை விஸ்தரிப்பதற்கான உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி ஆகிய உதவிகள் வடமாகாணம், மகளிர் விவகார அமைச்சினூடாக அண்மையில் வழங்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களினால் வேலணை கிழக்கு, 1ம் வட்டாரத்தில் சாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘யோசப் மெழுகுதிரிகள்’ உற்பத்தி செய்யும் குறித்த மகளிர் அமைப்பிடம் கையளிக்கப்பட்டது.