பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல்

கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக கீழ்வரும் பாடல் தொகுப்புக்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனை பஸ் தரிப்பு நிலையம், பொது விளையாட்டு மைதானம் போன்ற பொது வெளிகளில் ஒலிக்க செய்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளும் வகையில் தங்களது ஆன்மீக இசைத் தெரிவுகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு (npc.culture@yahoo.com) அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆன்மீக இசையொலி தொகுப்புக்களில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு எமது  இசைத் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.