பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

கடந்த வருடம் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 5 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு பெரிய வெங்காய விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கென மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பயனாளிகளுக்கு வசந்த கால நிலைப்படுத்தப்பட்ட தாய்க் குமிழ்கள் 100 கிலோ கிராம், ஆதார வலை மற்றும் பொலித்தீன் என்பன மானிய அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது

வவுனியா மாவட்டத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவகத்தினால் 27.03.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இராசேந்திரகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் செக்கட்டிப்புலவு கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் புத்திக I. ஹெட்டியாராய்சி (உதவி விவசாயப் பணிப்பாளர், ஆராய்ச்சி) அவர்கள் கலந்து கொண்டு விதை உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இந் நிகழ்வில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வித்தியாபுரம் எனும் இடத்தில் 28.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. கிருபவதனி சிவதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளர் திருமதி ராதிகா சஞ்சீவன் அவர்களும் வெங்காய இனவிருத்தியாளர், உதவி விவசாய பணிப்பாளர் புத்திக ஐ. ஹெட்டியாராய்ச்சி, மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர்கள், தொழினுட்ப உதவியாளர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்பின் உறுப்பினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தினர்.